/* */

கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம் அசத்தல்

குமாரபாளையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோம்பு பள்ளம் மினி பொக்லின் மூலம் தூய்மை செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம் அசத்தல்
X

மினி பொக்லின் மூலம் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் கோம்பு பள்ளம் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் உள்ளது. இது கத்தேரி பகுதியில் தொடங்கி காவிரி ஆற்றங்கரையோரம் மணிமேகலை வீதி வரை செல்கிறது. சமீபத்தில் இந்த கோம்பு பள்ளம் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்பட்டு, பள்ளத்தின் மையப்பகுதியில் கழிவுநீர் செல்லும்படி பாதை அமைக்கப்பட்டது.

நாளடைவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் குப்பைகள் கொட்டுவது, அங்குள்ள இறைச்சி கடையினர் கழுவுகளை கொட்டுவது, கட்டுமான கழிவுகள் கொட்டுவது என பலரும் செய்வதால், கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, பரவலாக செல்வதுடன் ஆங்காங்கே குளம் போல் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதனால் உருவாகும் கொசுக்களால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் துயரம் போக்க, கோம்பு பள்ளத்தை தூய்மை படுத்தி, பள்ளத்தின் மையப்பகுதியில் கழிவுநீர் எளிதில் செல்லும்படி, அடைப்புகளை நீக்க வேண்டும் கோரிக்கை எழுத்துள்ளது. மேலும் கோம்பு பள்ளத்தில் குப்பைகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமாரபாளையத்தில் கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி மேடாக்கி கசாப்க்கு கால்நடை வளர்த்து வருகிறார்கள். குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் எதிரில் கழிவுநீர் பள்ளத்தில் மாடுகள், கன்று குட்டிகள் கட்டி வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இதன் அருகில் மாட்டிறைச்சி கடையும் உள்ளது. மாடுகள் கட்டி வைக்கப்பட்ட இடம் மண் கொட்டப்பட்டு மேடாக ஆக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளத்தில் கழிவுநீர் செல்ல இடையூறு ஏற்படுகிறது. இதன் மறுபக்கம் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளத்தில் பொக்லின் மூலம் பல நாட்களாக குப்பைகள், மண் குவியல், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கால்நடைகளையும், கொட்டப்பட்ட மண் குவியலையும் அகற்றி கழிவுநீர் எளிதில் செல்லும்படி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோம்பு பள்ளம் தூய்மை படுத்த பெரிய பொக்லின் போதுமானதாக அல்ல என்பதால், தற்போது மினி பொக்லின் மூலம் நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 27 March 2023 5:24 PM GMT

Related News