டூவீலர் மீது லாரி மோதி விபத்து: மனைவி, 3 வயது மகன் பலி

Road Accident News Today -குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் தாய், 3 வயது மகன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டூவீலர் மீது லாரி மோதி விபத்து: மனைவி, 3 வயது மகன் பலி
X

பைல் படம்.

Road Accident News Today -கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கவுதம் 35. இவரது உறவினருக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையை பார்க்க டி.வி.எஸ். என்டிராக் வாகனத்தில் நேற்று இரவு 9 மணியளவில் கவுதம் ஓட்ட, இவரது மனைவி கிருத்திகா, 30, இவர்களின் குழந்தை பிரவித் 3, பின்னால் உட்கார்ந்து வந்துள்ளனர்.

கோவையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். பவானி லட்சுமி நகர் தாண்டி, சேலம் கோவை புறவழிச்சாலை காவிரி பாலத்தின் மீது வந்த போது, இவர்களுக்கு பின்னால் வேகமாக, நிலைதடுமாறி வந்த லாரி, இவர்களின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கவுதம் மனைவி, மகன் சம்பவ இடத்தில் பலியாகினர். அவ்வழியே வந்த சிலர் லாரியை பின் தொடர்ந்து செல்ல, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையான எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே லாரியை நிறுத்தி விட்டு, லாரி ஓட்டுனர் தலைமறைவாகி விட்டார். ஆம்புலன்ஸ் மூலம் இரு உடல்களையும், கவுதமையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-16T15:39:42+05:30

Related News