/* */

குமாரபாளையம் கோவில் செய்திகள்

குமாரபாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், 108 சங்காபிஷேக விழா நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் கோவில் செய்திகள்
X

குமாரபாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், 108  சங்காபிஷேக விழா நடந்தது.

சக்தி மாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேகம்

குமாரபாளையம், சுந்தரம் நகர் அருகே காளியண்ணன் நகர் சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் 16ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக பூஜைகள், 108 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

­­­­­­­­­­­­­­காட்டேரி அம்மன் கும்பாபிஷேகம்; யாகசாலை பூஜைகள்

குமாரபாளையத்தில் காட்டேரி அம்மன் கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. யாக சாலை பூஜைகள், பழனி மனோகரசிவம் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 9:30 மணியளவில், கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கற்பக விநாயகர் கோவில் 2ம் ஆண்டு துவக்க விழா

குமாரபாளையம், கோட்டைமேடு கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. கற்பக விநாயகர் மற்றும் இதர தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காவிரி நதிக்கு தீபாராதனை; பக்தர்கள் பங்கேற்பு

குமாரபாளையத்தில் காவிரி தாய் மற்றும் காவிரி நதிக்கு நடைபெற்ற தீபாராதனை விழாவில், பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அகிலபாரத சந்நியாசிகள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் காவிரி தாய்க்கு தீபாராதனை விழா நடைபெறுவது வழக்கம். காவிரி ஆற்றினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, அக். 21ல், கர்நாடக மாநிலம் தலைக்காவிரி பகுதியில் ரத யாத்திரை தொடங்கியது. இந்த நவ. 13ல் பூம்புகாரில் நிறைவு பெற உள்ளது. வழி நெடுக காவிரி ஆற்றில் ஆரத்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக நேற்று மாலை ரதயாத்திரை குழுவினர் குமாரபாளையம் வந்தனர். காவேரி நகர் பகுதியில் ரத யாத்திரை குழுவினருக்கு பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர், விடியல் பிரகாஷ், நகர தலைவர் கணேஷ்குமார், நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கண்ணன், சுகுமார் உள்பட பலர் வரவேற்றனர். காவிரித்தாயின் திருவுருவச்சிலைக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 15 Nov 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்