/* */

குமாரபாளையம்: இடமாற்றம் செய்யப்பட்ட ரேசன் கடை திறப்பு

குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேசன் கடை திறப்பு விழா நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம்: இடமாற்றம் செய்யப்பட்ட ரேசன் கடை திறப்பு
X

 கவுன்சிலர் அம்பிகா ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

சேலம்-கோவை புறவழிச்சாலையில் கடை எண்: 2, ரேசன் கடை செயல்பட்டு வந்தது. இது மிகவும் தொலைவாக இருந்ததால் பொதுமக்கள் அங்கு சென்று பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த கடையை நாராயண நகர் பகுதிக்குள் இடமாற்றம் செய்ய பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

வார்டு கவுன்சிலர் அம்பிகா முயற்சியின் பலனாக, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் திறப்புவிழா தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் அம்பிகா ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ரேசன் பொருட்களை முன்னாள் சேர்மன் ஜகநாதன், நிர்வாகிகள் ராஜாராம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் விநியோகம் செய்தனர்.

இதில் மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கிளைக்கழக செயலாளர்கள் கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

Updated On: 15 May 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்