/* */

அரசு பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா எனும் தலைப்பில் விழா நடந்தது

HIGHLIGHTS

அரசு பள்ளியில் ஆயிரமாயிரம்  அறிவியல் திருவிழா
X

குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா எனும் தலைப்பில் விழா நடந்தது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை ஒருங்கிணைந்து ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா என்ற தலைப்பில் குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார்.

இந்த அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர் குணசேகர், எளிய அறிவியல் பரிசோதனைகள், புதிர் கணக்குகள், கற்பனையும் கைத்திறனும் மற்றும் பல செயல்பாடுகள் மாணவர்களிடையே செய்து காண்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கணேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பி.டி.ஏ. தலைவர் ரவி, பள்ளி மேலாண்மை குழு தலைவி மேகலா, கவுன்சிலர் பரிமளம், விடியல் ஆரம்பம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் பெற்றோர் பொதுமக்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர் மோனிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி, குமாரபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் வாகன பிரச்சாரம் செய்தனர். குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து, தமிழக அரசின் மாணாக்கர்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் பெற, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீதிகள் தோறும் பிரச்சார வாகனம் மூலம் சென்று துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.

பிரசார வாகனத்தை வட்டார கல்வி அதிகாரி குணசேகரன் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நன்னறிவுடன் கூடிய, வளமான எதிர்காலம் அமைய, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி அரசு பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்களிடம் பிரசாரம் செய்தார்கள்.

இந்த வாகனத்தை வட்டாரகல்வி அதிகாரி குணசேகரன், தொடங்கி வைத்தார். பி.டி.ஏ.தலைவர் ரவி , ஆசிரியர் பயிற்றுநர் கணேஷ் குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி மேகலா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Updated On: 3 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்