/* */

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மலரஞ்சலி

குமாரபாளையத்தில் அதிமுக. ஓ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மலரஞ்சலி
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க ஓ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலர் நாகராஜன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தீய சக்தியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம், ஓ.பி.எஸ். தலைமையில் ஒன்றிணைவோம், மக்களை வஞ்சிக்கும் தி.மு.க.அரசு பற்றி மக்களிடம் எடுத்துரைப்போம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், பண்ணை பசுமை காய்கறி திட்டம், போன்ற திட்டங்களை அமல்படுத்த வலியுறுத்துவோம், நாளை நமதே, நாற்பதும் நமதே.. என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மாவட்ட அவை தலைவர் மணி, நகர அவை தலைவர் லோகநாதன், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், தொகுதி பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் நந்தினிதேவி, பூங்கொடி, ரேவதி, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அ.தி.மு.க.சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் அ.தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் மவுன ஊர்வலம் ஆனங்கூர் பிரிவு சாலையில் இருந்து, பயணியர் மாளிகை அண்ணா சிலை வரை நடைபெற்றது. ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணி துவக்கி வைத்தார். அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெ. உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழக முதல்வராக இருந்தவருமான ஜெயலலிதா, 1961ல் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படமான "ஶ்ரீ சைலா மகாத்மே" லிருந்து துவங்கினார். இவர் 1965ல் ஶ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எம்.ஜி.ஆர் உடன் 28 திரைப்படங்களும், சிவாஜி கணேசனுடன்பின்னர் எம்.ஜி.ஆர் உடன் 28 திரைப்படங்களும், சிவாஜி கணேசனுடன் 17 திரைப்படங்களும் நடித்து, தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார்.

எம்ஜிஆர் துவங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கினார் ஜெயலலிதா. 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், 1989ல் அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று, 1991ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து பதவிகாலம் முழுவதும் ஆட்சியிலிருந்த முதல் தமிழக பெண் முதல்வர் என பெயர் பெற்றார்.6முறை தமிழகத்தின் முதல்வராக இருத்த இவர், இடையே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். 75நாட்கள் மருத்துவமனையில் இருந்து, 5 டிசம்பர் 2016அன்று காலமான நிலையில், இன்னமும் அவரது இறப்பில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.


Updated On: 5 Dec 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  2. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  3. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  4. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  5. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  6. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  7. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  8. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  9. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  10. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்