/* */

குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம்

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய  முகாம்
X

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம் முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து சித்தா டாக்டர் கார்த்தி கூறுகையில், உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கத்தார் சார்பில் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர் மற்றும் அவரது துணைவியார் தலைமையில் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியோர்களுக்கு அரிசி, இனிப்புகள், பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டன. இதில் சங்க தலைவர் பிரகாஷ், முன்னாள் தலைவர் மனோகர், விவேக் உள்பட பலர் பங்கேற்றனர். மையத்தின் நிர்வாகி ஹேமமாலினி மற்றும் முதியோர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம், பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் அபெக்ஸ் சங்க தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை வகிக்க, ஈரோடு மாவட்ட மதுவிலக்குபிரிவு டி.எஸ்.பி. சண்முகம் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். டாக்டர் நடராஜன், அபெக்ஸ் நிர்வாகிகள் முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, கவுன்சிலர் புருஷோத்தமன், அபெக்ஸ் சங்க நிர்வாகி ஈஸ்வர், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ் கூறுகையில், படித்த இளைஞர்கள், இல்லத்தரசிகள், உள்ளிட்டோர் இந்த டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி தருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் மகளிர் மீதான வன்கொடுமையை தடுக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு, அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் அபெக்ஸ் சங்கம், முன்னேறும் மகளிர் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

இதில் ஈரோடு ஸ்கில்வேர் என்ற நிறுவனத்தின் நிறுவனரும், ஸ்கை பவுண்டேசன் இந்தியா அமைப்பின் தூதுவரான சமூக சேவகி கதைசொல்லி சரிதா ஜோ பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது :

கல்லூரி மாணவியர்கள் குறிப்பாக தங்களது சுய பாதுகாப்பையும், சுய முன்னேற்றத்தையும் வளர்த்துக்கொண்டு பெண்கள் மீதான வன்கொடுயையை தடுக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி தலைவர் இளங்கோ, இயக்குநர் நிர்மலா, அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ், முதல்வர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அபெக்ஸ் கிளப் வார விழா ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அபெக்ஸ் கிளப் வார விழாவையொட்டி, பஸ், லாரி, டெம்போ, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்வு அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ பங்கேற்று ஸ்டிக்கர் ஒட்டி சேவை பணியை துவக்கி வைத்தனர். குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் மகப்பேறு வார்டில் உள்ள 14 கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகள் கிட், குங்குமப்பூ வழங்கப்பட்டது. ஜி.ஹெச். பயன்பாட்டிற்காக எமர்ஜென்சி லைட் தலைமை டாக்டர் பாரதியிடம் வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர் புருஷோத்தமன், செயலர் கார்த்தி, எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் முதல்வர் பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் சம்பத்குமார், மனோகர், சேவை இயக்குனர் சம்பத், வெங்கடேஷ், பிரபு, விஜய்பிரதாப், ப்ரீத்தி, சந்தானம், உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Oct 2022 3:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...