/* */

கைத்தறி வேலை நிறுத்தம் வாபஸ்: கோரிக்கைகளை கண்டு கொள்ளாததால் அதிருப்தி

குமாரபாளையத்தில் கைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கோரிக்கைகளை கண்டு கொள்ளாததால் அதிருப்தியடைந்தனர்.

HIGHLIGHTS

கைத்தறி வேலை நிறுத்தம் வாபஸ்:   கோரிக்கைகளை கண்டு கொள்ளாததால் அதிருப்தி
X

குமாரபாளையத்தில் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் பட்டு ஜவுளி உற்பத்தியை தொடங்கினர்.

முடிவுக்கு வந்த கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தம்,கோரிக்கைகளை கண்டு கொள்ளாததால் அதிருப்தி

குமாரபாளையத்தில் கைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கோரிக்கைகளை கண்டு கொள்ளாததால் அதிருப்தியடைந்தனர்.

பட்டு, ஜரிகை, உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரித்ததையொட்டி பிப். 7 முதல் 15 நாட்களுக்கு பட்டு ஜவுளி உற்பத்தியை கைத்தறி நெசவாளர்கள் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பிப். 22 வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில், கைத்தறி தொழிலை நம்பியுள்ள 50 ஆயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நேற்று வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக அறிவித்து. கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியை தொடங்கினர்.

இது பற்றி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது: பட்டு கிலோ 3 ஆயிரம் இருந்தது, தற்போது 6 ஆயிரத்து 500 ரூபாய், ஜரிகை ஒரு மார் 350:00 ரூபாய் என இருந்தது, தற்போது 750:00 ரூபாய், வார்ப்பு பட்டு கிலோ 4 ஆயிரத்து 500 என இருந்தது தற்போது 7 ஆயிரம் ரூபாய் என அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளி ரகங்களை ஆர்டர் எடுத்த விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து எந்த விலைக்கு ஆர்டர் எடுப்பது என்றும் புரியாத நிலை உள்ளது. தை, மாசி மாதங்களில் திருமண முகூர்த்தங்கள்,திருவிழாக்கள் அதிகம் இருக்கும் நிலையில் பட்டு சேலை வியாபாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குமாரபாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடுமையான விலை உயர்வால் இதனை நம்பி வாழும் கைத்தறி மற்றும் சாய தொழில், அட்டை அடிப்பவர்கள், உள்ளிட்ட இதர சார்பு தொழில்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த 15 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வர்த்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை யாரும் கொண்டுகொள்ளவில்லை. இதனால் நாங்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து பட்டு விலையை குறைத்து, கைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பட்டு ஜவுளி உற்பத்தியை துவங்கியுள்ளோம். சங்க நிர்வாகிககள், உறுப்பினர்களை கலந்து பேசி அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் குப்பண்ணன், குமரேசன், ரங்கநாதன், சுதாகரன், வீரகுமாரன், தியாகராஜன், முனிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Updated On: 24 Feb 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!