/* */

பள்ளிப்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

Indian Democratic Youth Association conference

HIGHLIGHTS

பள்ளிப்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க மாநாடு
X

பள்ளிபாளையம் அருகே வெப்படையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 5வது மாநாட்டில் புதிய நிர்வாகிகளுக்கு மாநில குழு உறுப்பினர் கற்பகம் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து கூறினார்.

பள்ளிபாளையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 5வது மாநாடு நடைபெற்றது.

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 5வது மாநாடு ஒன்றிய தலைவர் செந்தில் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில குழு உறுப்பினர் கற்பகம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்

மாநாட்டில், வெப்படையில் ஐ.டி.ஐ. கல்லூரி அமைக்க வேண்டும், வெப்படை நால்ரோடு பஸ் நிறுத்த பகுதியில் கழிப்பிடம் அமைக்க வேண்டும், அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைத்து, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும், ஈக்காட்டூர் குடியிருப்பு பகுதியில் முறையான சாக்கடைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக கவின்ராஜ், செயலராக ராஜ்தேவ், பொருளராக செல்லப்பன் துணை தலைவராக குணசேகர், துணை செயலராக அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.



Updated On: 3 July 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்