/* */

குமாரபாளையம் 12வது வார்டில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் சுயேட்சை வேட்பாளர் அழகேசன்

குமாரபாளையம் 12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அழகேசன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் 12வது வார்டில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் சுயேட்சை வேட்பாளர் அழகேசன்
X

குமாரபாளையத்தில் அரசியல் கட்சியினருக்கு இணையாக 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டிடும் அழகேசன் அதிக கூட்டத்துடன் சென்று தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி இறுதி கட்ட பிரச்சாரம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன், தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு 12வது வார்டில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் அதிக கூட்டத்தை சேர்த்து அசத்தினார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவுடன் தீப்பெட்டி சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அழகேசன். 12வார்டின் முழுமைக்குமான சாக்கடை வரைபடம் தயார் செய்து ஆய்வு குழு ஏற்படுத்தி வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். மாதம் ஒரு முறை சொந்த செலவில் கொசு மருந்து அடிக்கப்படும்.

பொதுக்கழிப்பிடம் சீரான முறையில் குறிப்பிட்ட கால அளவில் சுத்தம் செய்யப்படும். சுகாதார பணியாளர்களை கொண்டு தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதை உறுதி செய்வோம். ஒற்றை பெற்றோர் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள குடும்பங்களில் இருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர உதவி செய்யப்படும்.

தகுதியான நபர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். மேள தாளங்கள் முழங்க அரசியல் கட்சியினருக்கு இணையாக அதிக கூட்டத்துடன் இறுதி கட்ட பிரச்சாரம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

Updated On: 17 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்