/* */

குமாரபாளையத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி : மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பிப். 24ம் தேதி பாவை கல்லூரியிலும், மார்ச் 16ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியிலும் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மாபெரும் தமிழ்க் கனவு  நிகழ்ச்சி : மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க்கனவு நிகச்சியில் பேச்சாளர் ஆறுமுகத்தமிழன் பேசினார். அருகில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழர் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாகக் கொண்டு செல்லும் வகையில், பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை உணர்த்திடும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியினை நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில், தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசை தோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் வளர்ச்சியும், ஊடகங்களின் தோற்றமும், கம்ப்யூட்டர் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அந்த வகையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பிப். 24ம் தேதி பாவை கல்லூரியிலும், மார்ச் 16ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியிலும் நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக இன்று இந்த கல்லூரியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளின் மூலம் தமிழின் பாரம்பரியத்தையும், முக்கியத்துவத்தையும், அதன் வரலாற்றையும் மாணவ, மாணவிகளின் இடையே கொண்டு செல்லப்படுகிறது என கூறினார்.

முன்னதாக சிலப்பதிகாரத் தமிழ்நாடு என்ற தலைப்பில் பேச்சாளர் ஆறுமுகத்தமிழன், அரை நூற்றாண்டு ஆட்சியில் தமிழ்நாடு பெற்றதும், இழந்ததும் என்ற தலைப்பில் எழுத்தாளர் செந்தில் வேல் ஆகியோர் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு ஆர்டிஓ கவுசல்யா, போலீஸ் டிஎஸ்பி மகாலட்சமி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி தாளாளர் நடேசன் மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 31 March 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?