/* */

குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் கிராம சபா கூட்டங்கள்

குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கிராம சபா கூட்டங்களும் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும்   கிராம சபா கூட்டங்கள்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் ,மற்றும் என்.சி.சி. சார்பில் காந்தி பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற விழாவில் என்.சி.சி. மாணவர்களுக்கு பல போட்டிகள் வைக்கப்பட்டு, பரிசாக புத்தகங்களை அமைப்பாளர் பிரகாஷ் வழங்கினார். என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சடையம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமை வகித்து, 22 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தருதல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மழை நீர் வீணாகாமல் தடுக்க மணல் மூட்டைகளை வைத்து தடுத்தல், மலேரியா, டெங்கு நோய்கள் வராமல் தடுக்க வாட்டர் டேங்குகளை மாதம் ஒருமுறை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே போல் குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் சானார்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் நடைபெற்றது. மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் காந்தி பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

Updated On: 2 Oct 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!