/* */

குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகள் புறப்பாடு

குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகளுடன் பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு   1000 காவடிகள் புறப்பாடு
X

குமாரபாளையம் அருகே இருந்து பங்குனி உத்திர விழாவையொட்டி பழனிக்கு முருக பக்தர்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து பாத யாத்திரை தொடங்கினர்.

குமாரபாளையம் அருகே பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகளுடன் பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு,வீ.மேட்டூர், சத்யா நகர், வேமன்காட்டுவலசு, தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, குமாரபாளையம், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், நல்லாம்பாளையம், மாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் பழனிக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஏப். 5ல் வருவதால் நேற்று காவிரி ஆற்றில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாத யாத்திரையை பக்தர்கள் தொடங்கினர். வழி நெடுக பொதுமக்கள் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் காலில் தண்ணீர் ஊற்றி, வணங்கி வழியனுப்பி வைத்தனர். இவர்களுக்கு வழி நெடுக சமூக ஆர்வலர்கள், முருக பக்தர்கள் உணவு, தண்ணீர், மோர் ஆகியன வழங்கினார்கள்.

பங்குனி உத்திரம் குறித்து முருக பக்தர்கள் கூறியதாவது:-

பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 1 April 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!