/* */

சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்க கட்டிடம்: நகர்மன்ற தலைவர் திறப்பு

குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்க கட்டிடத்தை சேர்மன் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்க கட்டிடம்:   நகர்மன்ற தலைவர் திறப்பு
X

சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்க கட்டிடம் திறந்து வைத்த குமாரபாளையம் முனிசிபாலி்டி  சேர்மன் விஜய்கண்ணன்

குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்க கட்டிடத்தை நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் திறந்து வைத்தார்.

குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலச்சங்க அலுவலக கட்டிடம் காவேரி நகரில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா மகாத்மா காந்தியின் நினைவு நாளான நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் சங்க அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து. நிர்வாகிகள் செல்வராஜ், விஸ்வநாதன்,சந்திரசேகரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் முன்னாள் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய பயன்கள்நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து மிகுந்த துன்பங்களை அனுபவித்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கென தமிழ்நாடு அரசு பல நலத்திட்டங்களை முனைப்புடன் நடைமுறைபடுத்தி வருகிறது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டிற்கு சேவை செய்தவர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, விடுதலைப் போராட்டத் தியாகிகள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ வசதி, இலவசப் பேருந்து வசதி, வேலைவாய்ப்பு மற்றும் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் போராட்ட வீரர்களின் தேசப்பற்று உணர்வை அங்கீகரிப்பதற்காக, அவர்களின் மேலான தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியத் திட்டத்தை 01.10.1966 முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக மூன்று மாத காலத்திற்குக் குறையாமல் சிறை தண்டனை பெற்றவர்கள் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களும், துப்பாக்கி சூட்டிலோ அல்லது விடுதலைப் போராட்டத்தின் போது காவலர் தடியடியிலோ இறந்தவர்களும் அல்லது நிரந்தரமாக ஊனமுற்றவர்களும் விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவர். பின்னர், இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கும், 1946-ஆம் ஆண்டு கடற்படை கலகத்தில் பங்கு கொண்டவர்களுக்கும், மதுரை சதித்திட்ட வழக்கில் சிறைத் தண்டனை அடைந்தவர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.

மேலும், விடுதலைப் போராட்டத்தின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களும், சொத்து பறிமுதல் செய்யப்பட்டவர்களும், அரசுப் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், அதற்கு ஆதாரமாக நீதிமன்ற அல்லது அரசு ஆதாரங்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்.

01.04.1980 முதல் ஓய்வூதியம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி, மூன்று வாரக் கால சிறைவாசம் என குறைக்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு 11.03.1983 அன்று முதல் நீக்கப்பட்டது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது அரசால் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி தற்போது இவ்வோய்வூதியமானது ரூ.15,000/-லிருந்து ரூ.16,000/-ஆக 15.08.2019 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மாநில அரசின் ஓய்வூதியம் பெற்று வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் இறக்க நேரிட்டால், இந்த ஓய்வூதியத் தொகையானது அன்னாரின் மனைவிக்கு / கணவருக்கு / உரிய வயதடையாத குழந்தைகளுக்குத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

மேற்படி ஓய்வூதியம் பெற்று வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் மகனாயிருந்தால் 18 வயதுக்கு மேலும், மகளாயிருந்தால் 21 வயதுக்கு மேலும், சுயமாய் சம்பாதித்து வாழமுடியாத அளவிற்கு மனவளர்ச்சி குன்றியவராகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருக்க நேர்ந்தால், அவர்களது வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இறந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத் தொகையும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்திரவின் படி தற்போது 15.08.2019 முதல் குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.7,500/-லிருந்து ரூ.8,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றி பெருமை பெற்றவர்களின் தியாகத்தைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில், அவர்களது வாரிசுகளுக்கும் சிறப்பு ஓய்வூதியமானது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் வழிதோன்றல்கள், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி மற்றும் முதுநிலை வழிதோன்றல்கள், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாமன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் தகுதியான வழிதோன்றல்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வழிதோன்றல் ஒருவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமானது கடந்த 15.08.2019 முதல் ரூ.7,500/-லிருந்து ரூ. 8,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் வழிதோன்றல்கள் 86 நபர்களுக்கும், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி மற்றும் முதுநிலை வழிதோன்றல்கள் 4 நபர்களுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாமன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் தகுதியான வழிதோன்றல் 56 நபர்களுக்கும் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வழிதோன்றல் ஒருவருக்கும் இந்த சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.



Updated On: 30 Jan 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!