/* */

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் முதியோர்களுக்கு அன்னதானம்

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில்  முதியோர்களுக்கு    அன்னதானம்
X

குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் அறம் செய்வோம் அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அறம் செய்வோம் என்ற பொதுநல அமைப்பினர் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகின்றனர். அன்னையர் தினத்தையொட்டி குமாரபாளையம் அருகே எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் அமைப்பாளர் ரவிக்குமார் தலைமையில், அங்குள்ள 45க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் முதியோர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்செங்கோடு தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையம் நடத்தி வரும் ஹேமாமாலினிக்கு சேவை விருது வழங்கப்பட்டது. இதனை ஈரோடு டி.எஸ்.பி. பவித்ரா வழங்கினார்.

இது பற்றி நிறுவனர் ஹேமாமாலினி கூறியதாவது:-

நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவள். பெற்றோர் என் சிறு வயதில் இறந்ததால் நான் ஆதரவற்றோர் மையத்தில்தான் வளர்ந்தேன். மதுரையில் ஏ.என்.எம். டிப்ளமா நர்சிங் பயின்று வேலை செய்து வந்தேன். திருமணம் ஆகி சேலம் வந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து குமாரபாளையத்திற்கு வந்தேன். 2019 முதல் அன்னை ஆதரவற்றோர் மையம் என்ற பெயரில் முதியோர் காப்பகம் அமைத்தேன். என் பெற்றோர் இல்லை என்றாலும் இங்குள்ள முதியோர்கள் என் பெற்றோர்கள் என எண்ணி வாழ்ந்து வருகிறேன்.

முதலில் ஒருவர், அடுத்து, 2,3,5,7,10 என்றாகி தற்போது 35 பேர் உள்ளனர். அனைவருக்கும் 3 வேளை உணவு, உடை, மருத்துவ உதவி என என்னால் முடிந்தவைகளை கொடுத்து வருகிறேன். பலர் பல சூழ்நிலைகளில் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டு, மனதிற்கு அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் இங்கு வந்துள்ளனர். நான் அவர்களை கவனித்து கொள்கிறேன் என்பதை விட என்னை அவர்கள் மகள் போல் கவனித்து கொள்கிறார்கள்.

நல்ல மனம் படைத்த பலர் திருமண நாள், பிறந்த நாள், திருவிழா, வீட்டு திருமணம், உள்ளிட்ட பல விஷேச நிகழ்வுகளின் காரணமாக எங்கள் மையத்திற்கு உணவு வழங்கி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கத்தார் பல குழுவினர் சேவை மனப்பான்மையால் இங்கு உணவு கிடைத்து வருகிறது. கட்டில், தலையணை, பெட்சீட், பேன், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை தாராளமாக செய்து வருகிறார்கள். நல்லது செய்தால் ஆண்டவன் துணை நிற்பான் என்பது போல் ஆண்டவன் துணையால் இந்த மையம் இனிதே செயல்பட்டு வருகிறது. அரசு சார்பில் உதவிகள் கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 14 May 2023 3:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?