உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு
குமாரபாளையத்தில் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்
குமாரபாளையத்தில் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இது தவிர மேலும் 43 பேர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறி வருவதுடன், மாவட்டம் முழுதும் உள்ள ஓட்டல் களில் ஆய்வு செய்ய உத்திரவிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் க்ரில் சிக்கன் 9 கிலோ, குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட பிரியாணி 4 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 25 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அபராதமாக 7 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர சாலைகளில், தள்ளு வண்டிகளில் சில்லி சிக்கன், சில்லி மீன், முழு மீன் ரோஸ்ட் என பல வகைகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இது போன்ற கடைகள் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ளன. இவைகள் பழைய மீன்களா? என உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பல ஓட்டல் கடைகளில் முதல் நாள் போட்ட புரோட்டாக்கள் மறுநாள் சூடு செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
இது போன்ற கடைகளில் பழைய எண்ணை பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இதனால் வயிறு சம்பந்தமான பல நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகிறார்கள். கூலி வேலைக்கு சென்று, சிறுக சிறுக உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை இது போன்ற தரமற்ற சில கடைகளில் உணவுப் பொருட்களை உண்டு பலரும் பதிக்கப்படும் நிலை, இனியும் தொடராதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.