/* */

குமாரபாளையத்தில் தீபாவளி தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் 

குமாரபாளையத்தில், தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில், தீபாவளி தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, அபெக்ஸ் சங்கம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக, தீபாவளி தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். அபெக்ஸ் கிளப் தலைவர் அபெக்ஸ் ஆர்.பிரகாஷ், விடியல் ஆரம்பம் அமைப்பின் குணசேகரன், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் அவரது குழுவினர் முன்னிலை வகித்தனர். இதில், தீ விபத்து இல்லாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை, தீயணைப்புத்துறையினர் விளக்கினர். பள்ளி மாணவ மாணவர்களுக்கு, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அத்துடன், தீ விபத்து தொடர்பாக, மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அபெக்ஸ் விஜய்பிரதாப், இசை மணி, கிருஷ்ணா, வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 10:55 AM GMT

Related News