/* */

தேர்தலும், திருவிழாவும்.. களைக்கட்டும் குமாரபாளையம்!

குமாரபாளையத்தில் தேர்தல் ஒருபக்கமும், திருவிழா மற்றொரு பக்கமும் தற்போது களை கட்டியுள்ளது.

HIGHLIGHTS

தேர்தலும், திருவிழாவும்.. களைக்கட்டும் குமாரபாளையம்!
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா பிப். 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதே நாளில் 33 வார்டுக்கு 188 பேர் போட்டியிட்ட குமாரபாளையம் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் 33 பேர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்றவர்கள் பதவியேற்கும் நாளான மார்ச் 2ம் தேதியே காளியம்மன் கோவிலில் திருவிழாவும் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. மார்ச் 4ல் காலை தலைவர் தேர்தல், மாலை துணை தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் தினமும் நடைபெறவுள்ளன. தி.மு.க. 14, சுயேச்சை 9, அ.தி.மு.க. 10, என்ற நிலையில் தி.மு.க.வினர் தலைவர் பதவியை பெற 17 பேர் ஆதரவு பெற்றாக வேண்டும். இதனால் திமுகவினரும் அதிமுகவினரும் சுயேச்சை வேட்பாளர்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.

தி.மு.க.வில் சீட் கிடைக்காத அதிருப்தி வேட்பாளர் விஜய்கண்ணன் வெற்றிபெற்றதால் அவரும் தலைவர் பதவியை அடைய சுயேச்சை மற்றும் தி.மு.க. வேட்பாளர்களிடம் முயற்சி செய்து வருகிறார். தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் தோல்வியுற்றதால், தி.மு.க.வில் வெற்றிபெற்ற 14 பேருடன் 3 சுயேச்சை ஆதரவுடன் தலைவர் பதவியை அடைய தி.மு.க. மூத்த நிர்வாகிகள் முயன்று வருகிறார்கள். ஆயத்த ஆடை தயாரிப்பு செய்து வரும் தி.மு.க. வேட்பாளர் ஒருவரை தலைவர் பதவிக்கு முன்மொழியலாம் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் நகர செயலர் நாகராஜன் வெற்றி பெறாததால், இருக்கிற 10 வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களை சேர்த்து முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பழனிச்சாமி என்பவரை நியமிக்க அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் முயன்று வருவதாக தெரிகிறது.

முன்னாள் நகரமன்ற துணை தலைவராக இருந்த பாலசுப்ரமணியும் துணைத் தலைவர் பொறுப்பினை பெற முயன்று வருகிறார். தேர்தல் களம் திருவிழாக்கோலம் கொண்ட நிலையில், காளியம்மன் கோவில் திருவிழாவும் தற்போது நடைபெற்று வருவதால் குமாரபாளையம் நகரம் களை கட்டியுள்ளது.

Updated On: 24 Feb 2022 4:30 PM GMT

Related News