/* */

விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு கல்வி உதவி தொகை: விண்ணப்பிக்கும் முகாம்

குமாரபாளையத்தில் கல்வி உதவி தொகைக்கு விவசாயக்கூலி தொழிலாளர்கள் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு கல்வி உதவி தொகை: விண்ணப்பிக்கும் முகாம்
X

குமாரபாளையம் தாலுக்கா அளவிலான விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கல்வி உதவி தொகைக்குவிண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் தாலுக்கா அளவிலான விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் நடைபெற்றது.

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் முகாம் நடைபெறும் நாளில் அதிகபட்ச மனுக்கள் பதிவு செய்ய ஏதுவாக நேரில் வந்து பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டனர். நன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் 2.5 ஏக்கரும், புன்செய் நிலம் 5 ஏக்கரும் வைத்துள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். பெற்றோர் ஆதார், மாணவ, மாணவியர் ஆதார், ரேசன் அட்டை, வங்கி பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருவதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்கள் முகாமிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். குமாரபாளையம் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் விவசாய தொழிலாளர் குடும்பத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பித்தனர். தனி வட்டாச்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011 (திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)

பெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.10,000. ஆண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.8,000.முதியோர் ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்) காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்) விபத்தின் மூலம் இறப்பு - ரூ.1 இலட்சம். இரண்டு கைகள் இழப்பு - ரூ.1 இலட்சம்.இரண்டு கால்கள் இழப்பு - ரூ.1 இலட்சம்.

ஒரு கை ஒரு கால் இழப்பு - ரூ.1 இலட்சம்.மீட்க முடியாத அளவுக்கு கண்கள் பாதிப்பு - ரூ.1 இலட்சம்.ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு - ரூ.50,000.பக்கவாதம் - ரூ.50,000.படுகாயம் மூலம் கைகள் இழப்பு - ரூ.20,000.இயற்கை மரணம் (மெரூன் நிற அட்டை பெற தகுதியுள்ள உறுப்பினர்) - ரூ.10,000.ஈமச்சடங்கு செலவு (இறப்பு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை) - ரூ.2,500.

கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்காதோருக்கு),தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு - ரூ.1,750 (ஆண்களுக்கு), ரூ.2,250 (பெண்களுக்கு).முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).

சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).முதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்குவோருக்கு)தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,450 (ஆண்களுக்கு), ரூ.1,950 (பெண்களுக்கு).கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ1,450 (ஆண்களுக்கு), ரூ 1,950 (பெண்களுக்கு).

இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு - ரூ.2,000 (ஆண்களுக்கு), ரூ.2,500 (பெண்களுக்கு).முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு - ரூ.3,250 (ஆண்களுக்கு), ரூ.3,750 (பெண்களுக்கு).சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).முதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.6,250 (ஆண்களுக்கு), ரூ.6,750 (பெண்களுக்கு).இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Updated On: 25 Jan 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!