விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை பார்வையிட்ட டி.எஸ்.பி.

குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை டி.எஸ்.பி. நேரில் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விநாயகர் சிலை கரைக்கும்   இடத்தை  பார்வையிட்ட டி.எஸ்.பி.
X

குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை டி.எஸ்.பி. நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை டி.எஸ்.பி. நேரில் பார்வையிட்டார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகரம் முழுவதும் ஆங்காங்கே பக்தர்களால் வைக்கப்பட்ட ஒரு அடி முதல் 9 அடி வரை கொண்ட 34 விநாயகர் சிலைகள் தினசரி சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டு வந்தது. மூன்றாவது நாளில் பக்தர்களால் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட உள்ளன.

குமாரபாளையத்தில் நகராட்சி அருகில் உள்ள காவிரி கரையோர பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியினை நேற்று திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் பார்வை யிட்டார். அவருடன் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். அப்பொழுது விநாயகர் சிலைகளை கரைக்க காவிரி ஆற்றிற்குள் பொதுமக்க ளை யாரையும் அனுமதிக்க மாட்டோம்.

எங்களால் அமைக்கப்பட்ட ஜே.சி.பி வாகனம் மூலமாக விநாயகர் சிலைகளை பெற்று, அவற்றை காவிரியில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தவுடன் இதனால் விபத்துகள் தவிர்க்கப் படும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டி.எஸ்.பி. கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது சேவற்கொடியோர் பேரவை பரமன் பாண்டியன் விடியல் பிரகாஷ் தீனா மற்றும் அங்கப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.




Updated On: 19 Sep 2023 4:15 PM GMT

Related News