/* */

தேமுதிக. உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் தொகுதி தேமுதிக சார்பில் உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேமுதிக. உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற தொகுதி தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல்ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் படிவத்தை சிறப்பு அழைப்பாளர்கள் கேப்டன் மன்ற மாநில துணை செயலர் சுல்தான் பாஷா, மாவட்ட செயலர் விஜய்சரவணன், வழங்கினார்கள்.

குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் உள்கட்சி தேர்தல்ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், குமாரபாளையம் நகர செயலர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கேப்டன் மன்ற மாநில துணை செயலர் சுல்தான் பாஷா, மாவட்ட செயலர் விஜய்சரவணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொண்டர் ஒருவர் , கேப்டனை எங்கள் டி.வி.யிலாவது காட்டுங்கள். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள், என்றதும், சிறப்பு அழைப்பாளர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 25 அவரது பிறந்தநாளில் காட்ட ஏற்பாடுகள் செய்யப்படும், என கூறினார்கள். இதை கேட்டதும் அனைவரும் கைகள் தட்டி வரவேற்றனர். ஒன்றிய செயலர் மணியண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Updated On: 19 July 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை