/* */

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்த கோரிக்கை

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்த கோரிக்கை
X

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள். கோப்பு படம்.

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்க கூட்டம்:-குமாரபாளையத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட துணை தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சந்திரா, செயலராக குருசாமி, பொருளராக ராஜா, துணை தலைவராக சம்பூரணம், துணை செயலராக துரைசாமி உள்ளிட்ட 15 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 43 ஆலைகளில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும், அதற்கான பிரிமியம் தொகையை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும், கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகம்தான் ஏற்க வேண்டும், விபத்து மரணம் ஏற்பட்டால் கரும்பு வெட்டும் தொழிலாளியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குதிரைகளால் விவசாயிகளுக்கு தொல்லை:- குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் பல குதிரைகள் கட்டப்படாமல் சுற்றி திரிகின்றன. இவைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து,அங்கு நடப்பட்டிருக்கும் நாற்றுகளை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு ஆலாங்காட்டுவலசு பகுதியில் விவசாயி முருகன் என்பவரது வயலில் நுழைந்த குதிரைகள் அங்கு நட்டு வைக்கபட்டிருந்த நாற்றுகளை பெருமளவில் சேதப்படுத்தியுள்ளன. இது குறித்து ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் கூறியதாவது:-

முருகன் வயலில் இரண்டு ஏக்கர் அளவில் பயிர்களை குதிரைகள் மேய்ந்து சேதப்படுத்தியுள்ளன. நடவு கூலி ஏக்கருக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய். வரப்பு கட்ட ஏக்கர் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய். ஏர் ஒட்டவும், உரம் போடவும் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது. இந்த குதிரைகள் சேதப்படுத்தியதால் முருகனுக்கு அதிக அளவு பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரண தொகை கொடுக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்மழையால் விவசாய பணிகள் தொடக்கம்:-குமாரபாளையம் பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் பல மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், தொடர்மழையாலும் விவசாயிகள் தங்கள் நிலங்களை சாகுபடி செய்ய உழுது தயார் செய்து வருகிறார்கள். இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:-மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் குறிப்பிட்ட சில மாதங்கள் தான் தண்ணீர் வரும். தொடர்மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர் நிரம்பி உபரி நீர் இரண்டு லட்சம் கன அடி வரையில் வந்ததால் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. தற்போதும் ஓரளவு நிலைமை சீராகி, கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வு, கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் உள்ள நிலையில் எங்கள் விவசாய நிலங்களில் சாகுபடி பணியை தொடங்கி உள்ளோம். நிலத்தை உழுது தயார் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விவசாயிகளுக்கு பயிற்சி:- பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் மண் வள பாதுகாப்பு, அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை முறையில் உரமிடுதல், ரசாயன உரங்கள் குறைத்து உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் இடுவதன் முக்கியத்துவம், மண் பரிசோதனை அவசியம், மண் மாதிரிகள் சேகரித்தல் செயல்முறைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை முறையில் உரமிடுதல், பூச்சி நோய் தாக்குதல் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை அலுவலர் சவுந்தரராஜன், இயற்கை முறை விவசாயி யுவராஜ், உதவி வேளாண்மை அலுவலர் விஸ்வபிரியா, தொழிநுட்ப மேலாளர் பிரியங்கா உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 Oct 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு