/* */

திருவிழா விடுமுறை விடாததால் குழப்பம்: பள்ளி மாணவர்கள் தவிப்பு

குமாரபாளையத்தில் உள்ளூர் திருவிழா விடுமுறை விடாததால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவிழா விடுமுறை விடாததால் குழப்பம்: பள்ளி மாணவர்கள் தவிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவிற்கு பூ மிதித்தல், தேர்த்திருவிழா நடைபெறும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம். குமாரபாளையம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் புதன்கிழமை மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், அடுத்து வரும் சனிக்கிழமை நாளில் விடுமுறை விடப்பட்ட நாளுக்கு உண்டான வகுப்பு நடத்த அனுமதி கேட்டு விடுமுறை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கொரோனா விடுமுறைக்கு பின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி 6 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், எந்த நாளில் அதனை சமன் செய்வது என்பது தெரியாமல் விடுமுறை விடப்படாமல் உள்ளதாக மாணவர்கள் சிலர் கூறினர்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள மொபைலில் முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. பள்ளி துணை ஆய்வாளரிடம் கேட்ட போது, இதனை மாவட்ட கல்வி அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனால் இந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகின்றனர். திருவிழா சமயத்தில் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நாங்கள் மட்டும் சென்று என்ன செய்வது என ஆசிரியர்களும் புரியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

Updated On: 8 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  3. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  5. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  6. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  7. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  8. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  9. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’