/* */

குமாரபாளையம் அரசு கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்புமுகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்
X

மாரபாளையம்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாமில் மாணவ, மாணவ, மாணவியர் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாம் முதல்வர் ரேணுகா தலைமையில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

இதில் கோவில் வளாகம் தூய்மை செய்தல், வெள்ளையடித்தல், திருவள்ளுவர் நகர், நடராஜா நகர் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்துதல், அங்குள்ள மாணவ மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் துறையின் சிறப்புக்கள் பற்றி எடுத்துரைத்தல், மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 50 மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். இந்த முகாம் ஏப். 6 வரை நடைபெறவுள்ளது. பேராசிரியர்கள் ஞானதீபன், பிரகாஷ், சரவணாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் மாதம் குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் வகையில் கூறப்பட்டது. இதில் பல மாணவியர்களுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும் பணியில் குளறுபடி ஏற்பட்டு, வங்கிக்கும், கல்லூரிக்கும் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டால், வங்கியில் போய் பாருங்கள் என்கிறார்கள். வங்கியில் கேட்டால் இங்கு எல்லாம் சரியாகத்தான் செயல்படுத்தி வருகிறோம். கல்லூரியில் சென்று சரியாக பதிவு செய்து தர சொல்லுங்கள் என்கிறார்கள். இதனால் மாணவியர் தினமும் வகுப்பு நேரங்களில் வங்கிக்கும், கல்லூரிக்கும் அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். பெண் பிள்ளைகள் வங்கிக்கு சென்று கேட்க சங்கடப்படும் நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலித்து, குறைகளை களைந்து அனைத்து மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா கூறியதாவது:

ஆதார் பதிவின் போது வைக்கப்பட்ட கைரேகை, தற்போது பல வருடங்கள் ஆனதால், பொருந்தாத நிலை, விலாசம் பலர் மாறியுள்ளதால் ஏற்பட்ட நிலை, மொபைல் எண்கள், ஆதார் பதிவின் போது கொடுத்ததும், தற்போது உள்ளதும் வேறாக இருக்கும் நிலை, என இது போன்ற பல காரணங்களால் உதவித்தொகை பெற சிக்கல் எழுந்துள்ளது. இதனை மாணவியர் மற்றும் பெற்றோர் வசம் சொல்லி சரியான தகவல்கள் சேகரித்து பதிவு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 1 April 2023 12:41 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்