/* */

குமாரபாளையத்தில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரை தலைமையில் தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது. சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அசோகன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் ஒன்றுக்கு கூலி 600 ரூபாயாக உயர்த்த வேண்டும், கொக்காராயண்பேட்டை, தட்டான்குட்டை பகுதிகளில் பட்டா வழங்க வேண்டும், ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு ஆதர விலை எம்.எஸ்.பி. பரிந்துரை படி வழங்கிடுக, உபரி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கிடுக, ரேசன் கடையில் பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள், ஆயில் உள்ளிட்ட தொகுப்பை இலவசமாக வழங்கிடுக, கல்வி, சுகாதார துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, 55 வயது கடந்த அனைத்து முதியோருக்கு மாதம் 5 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மோகன், முத்துக்குமார், சம்பூர்ணம்,சண்முகம், சக்திவேல் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 8 Aug 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்