ஆயுதபூஜை: குமாரபாளையத்தில் மார்க்கெட்டில் குவிந்துள்ள பூஜைப்பொருள்

நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படும் நிலையில், குமாரபாளையம் மார்க்கெட் பகுதிகளில் பூஜை பொருட்கள், பொரி உள்ளிட்டவை குவிந்துள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆயுதபூஜை: குமாரபாளையத்தில் மார்க்கெட்டில் குவிந்துள்ள பூஜைப்பொருள்
X

 குமாரபாளையம் மார்க்கெட் வளாகம்,  ஆயுதபூஜை கடைகளால் களை கட்டிள்ளது.

நாளை ஆயுதபூஜை, அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூஜை பொருட்கள், பூக்கள், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது வழக்கம். இதன் காரணமாக குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்கள் கடைகள், மாவிலை, பல வகையான பூக்கள், பழக்கடைகள், பொரி, கடலை கடைகள் உள்ளிட்ட பூஜை சாமான் கடைகள் அதிகம் அமைக்கபட்டுள்ளன. இதனால் இப்பகுதியே களை கட்டியுள்ளது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பூஜை சாமான் மற்றும் இதர பொருட்களை வாங்கி வருகின்றனர்.

வியாபாரிகள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் எங்கள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து நின்றோம். சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பூஜை சாமான் உள்ளிட்ட ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்களும் எங்களுக்கு விதிக்கப்பட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை, முகக்கவசம் அணிய சொல்லியும், சமூக இடைவெளியுடனும், கிருமிநாசினி பயன்படுத்த சொல்லியும் அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 13 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
 2. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த திருச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 4. அவினாசி
  மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
 5. பவானி
  அரசு விதைப்பண்ணை மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி: கலெக்டர்...
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 7. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு
 8. சேந்தமங்கலம்
  எருமப்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்: 2 தனிப்படையினர் தேடுதல் வேட்டை
 9. பெரியகுளம்
  நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு
 10. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு