/* */

குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் உத்திரவின்படி, சேலம் மண்டல நகராட்சிகள் இயக்குனர் ராஜன் வழிகாட்டுதலின் பேரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.

இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவு பங்கேற்று இந்த கலை நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன், உள்பட பலர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவர்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு, நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில், நாடகக் கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கிராமியப் பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும், கட்டைக்கால் ஏணிக்கால் பூட்டிக்கொண்டு நடனமாடியும், கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், மதுப்பழக்கத்தினால் சமூக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 30 March 2023 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!