/* */

குமாரபாளையத்தில் அன்பழகன் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலர் அன்பழகன் நூறாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அன்பழகன் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மற்றும் விடியல் ஆரம்பம் சார்பில் அன்பழகன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகில் உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் 101 வது பிறந்த தின விழா தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது. அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவன் மணிகண்டன், இரண்டாமிடம் பெற்ற தாருணிகா, மூன்றாமிடம் பெற்ற மதுமிதா ஆகிய மாணவ, -மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை பார்வதி, ராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதே போல் குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அன்பழகன் பிறந்த நாள் விழா, காவேரி நகரில் விடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பதவிகள், சாதனைகள் படைத்த அன்பழகன் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிர்வாகிகள் தீனா, சிவகுமார், சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் திமுக: . சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சொத்துபாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர தி.மு.க. செயலர் செல்வம், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

திமுக நிர்வாகிகள் கூறியதாவது: க.அன்பழகன், திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாண சுந்தரனார், சுவர்ணம்பாள் தம்பதியருக்கு, 1922 திசம்பர் 19 -இல் பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா ஆகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின், 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1962 ஆம் ஆண்டில், சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971இல், சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1983 ஆகஸ்ட் 10ஆம் நாள் ஈழத்தமிழர் பிரச்னையில் இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் போதிய கவனம் செலுத்தாதைக் கண்டித்து தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இவரும் அன்றைய தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியும் ராஜினாமா செய்தனர்.

திமுக.வின் மூத்த மேடைப் பேச்சாளராக விளங்கினார். ஈ.வெ.ரா. அடியொற்றி நடந்தார். இவர், 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்

முதுமையின் காரணமாக 2020 பிப்ரவரி 24 அன்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 2020, மார்ச் 7 அதிகாலை 1.10 மணி அளவில் காலமானார்.

க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2021 டிசம்பர் 19 அன்று சென்னையில் அன்பழகனின் மார்பளவு சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார். மேலும் அந்த வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்ற பெயரையும் சூட்டினார். மேலும் அன்பழகனின் நூல்களை நாட்டுடமையாக்கி அதற்கு ஈடாக அவரின் வாரிசுகளுக்கு 25 இலட்சம் வழங்கினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Updated On: 19 Dec 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!