Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தட்டான்குட்டை கோவிலூர் சத்யா நகர் ஏரிக்கரை போன்ற பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு நிர்வாகி குருசாமி தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இதே கோரிக்கை வலியுறுத்தி தாசில்தார் தமிழரசியிடம் மனுவாக கொடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் துரைசாமி, நிர்வாகிகள் மாதேஸ்வரி, பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.