Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அருகே வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்யும் செவிலியர்
குமாரபாளையம் அருகே செவிலியர்கள் வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.
HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வயதானவர்களுக்கு செவிலியர்கள் வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்தனர்.
தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்காபாளையம் பி.ஹெச்.சென்டர் சார்பில் செவிலியர்கள் வீடு வீடாக சென்று வயதானவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதனை செய்தனர். நோய்கள் குறித்து கேட்டறிந்து சிகிச்சை வழிமுறைகள் குறித்து கூறினர். பொதுமக்கள் பலரும் இதனால் பயன்பெற்றனர்.