/* */

காணாமல் போன குழந்தை 2மணி நேரத்தில் மீட்பு

காணாமல் போன குழந்தையை போலீசார் 2மணி நேரத்திற்குள் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

காணாமல் போன குழந்தை 2மணி நேரத்தில் மீட்பு
X

பீகார் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷம்குமார், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். கட்டுமான கூலித்தொழிலாளியான இவர் இன்று தனது மனைவி தேஜஸ்ரீ, 3வயது இளைய மகள் சாந்தவியுடன் வெப்படை சந்தைக்கு சென்றுள்ளார்.

அப்போது கூட்டம் மிகுதி காரணமாக 3வயது குழந்தை வழி தடுமாறி, சேலம் செல்லும் சாலையில் தனியாக நின்று கொண்டு பெற்றோர் காணவில்லை என்று அழுது கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியினர் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் அழுது கொண்டிருந்த குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இதன் பின்னர் வெப்படை சுற்று வட்டார பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தோஷம் குமார் குழந்தை காணாமல் போன குறித்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை தொலைத்த பெற்றோரிடம் இரண்டு மணி நேரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குழந்தையை ஒப்படைத்து அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மேலும் பெற்றோரும் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

Updated On: 1 March 2021 5:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  4. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  5. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  6. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  7. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  8. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  9. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?