/* */

முன்விரோதத்தால் ஒருவர் கொலை, குற்றவாளிகள் கோர்ட்டில் சரண்

முன்விரோதத்தால் ஒருவர் கொலை, குற்றவாளிகள் கோர்ட்டில் சரண்
X

நாமக்கல் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த கொலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் இரவு சுமார் 10 மணியளவில் தனது நண்பர்களுடன், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் பேசிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்ற இளைஞர் சரவணனை கீழே தள்ளி விட்டாராம். பின்னர் சரவணனை தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணனுடைய நண்பர்கள் பிரகாசை தடுத்தனர். அப்பொழுது சரவணனின் நண்பர்கள் பிரபாகரன், முரளிதரன் ஆகியோரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து பிரகாஷ் தப்பி சென்று விட்டாராம். பின்னர் சரவணன் உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரவணனின் நண்பர்கள் முரளிதரன், பிரபாகரன் ஆகியோரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மீட்டு சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த பிரேதத்தினை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சரவணனுக்கும் கொலையாளி பிரகாஷுக்கும் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சரவணனை கொலை செய்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோர் இன்று திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தனர்.

Updated On: 21 Dec 2020 9:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!