/* */

நாமக்கல் மாவட்ட விவசாயிகளே.. உங்க ஊரு வேளாண் அலுவலர் யார்? இதோ உங்களுக்காக..

Namakkal News Today - நாமக்கல் மாவட்ட வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளவேண்டிய முகவரி, தெலைபேசி, இமெயில் முகவரியை தெரிந்துகொள்வோம்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட விவசாயிகளே.. உங்க ஊரு வேளாண் அலுவலர் யார்?  இதோ உங்களுக்காக..
X

Namakkal News Today - நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருகிறது வேளாண்மைத் தொழில். மாவட்டத்தில் உள்ள 70 சதவிகித மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக வேளாண்மை உள்ளிட்ட அதனைத் தொடர்புடைய தொழிலை செய்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 3363.35 சதுர கிலோ மீட்டரில் 3.367 லட்சம் எக்டேர் பயிர் பரப்பாளவாக அமைந்துள்ளது.

மேலும் வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தேவையைப் பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் போன்றவைகளே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடாகவும் இருந்து வருகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயறு வகைகள், எண்ணெய்வித்து, ஊட்டமிகு சிறுதானியங்கள், எண்ணெய்பனை, மரக்கன்றுகள் நடுதல், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், மண் வள அட்டை இயக்கம், மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிர் பரவலாக்கம் மூலம் அதிக வருமானம் கிடைப்பதோடு, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் கிடைப்பதனால் உழவுத் தொழில் செய்பவர்களுடைய பொருளாதார நிலை உயருகின்றது.

இந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாள்தோறும் வேளாண் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், தரமான விதைகள் வழங்குதல், தரமான இரசாயன உரங்களைக் கிடைக்கச் செய்வதோடு அதன் விநியோகத்தைக் கண்காணித்தல், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் தொழில் நுட்பங்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பதோடு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மூலப்பொருட்களின் உற்பத்தியினைப் பூர்த்தி செய்து வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பணிகளை வேளாண்மைத் துறை செய்து வருகிறது.

Namakkal News

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:

  1. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், மோகனூா் ரோடு, நாமக்கல்-637001. 04286-233698, adaagrinkl@gmail.com
  2. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், BSNL அலுவலகம் அருகில், சேந்தமங்கலம் ரோடு, புதுச்சத்திரம் – 637018. 04286-243333, adaaecpcm@gmail.com
  3. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், சேந்தமங்கலம் – 637409. 04286-270027, adaaecsdm@gmail.com
  4. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், எருமப்பட்டி-637013. 04286-252225, adaaecept@gmail.com
  5. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், மோகனூா் 637015. 04286-255555, adaaecmhr@gmail.com
  6. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், செம்மேடு (அஞ்சல்), கொல்லிமலை-637411. 04286-247585, agrikolli@gmail.com
  7. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், இராசிபுரம்-637408. 04287-224678, adaaecrpm@gmail.com
  8. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், வெண்ணந்தூா்-637505.. 04287-264109, adavnr@gmail.com
  9. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், நாமகிரிபேட்டை-637406. 04287-240526, adanamagiripettai@gmail.com
  10. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், திருச்செங்கோடு-637211. 04288-252609, ada_tge@yahoo.in
  11. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், பள்ளிபாளையம்-637006. 04288-242996, adappm@gmail.com
  12. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், எலச்சிபாளையம்-637202. 04288-231242, adaeplm@gmail.com
  13. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், செம்பாம்பாளையம், கருமனூா் (அஞ்சல்), மல்லசமுத்திரம்-637503.. 04288-238800, adaaecmsm@yahoo.in
  14. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், பரமத்தி-637207. 04268-251220, adaaecpmt@gmail.com
  15. வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், கபிலா்மலை-637204. 04268-254244, adaaeckbm@gmail.com

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:

வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிலுவம்பட்டி (அஞ்சல்), நாமக்கல் – 637001. Phone : தொலைபேசி எண்: 04286-280465. Email : மின்னஞ்சல்: jdagr.tnnmk@nic.in

Updated On: 2 Dec 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!