/* */

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு
X

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) தொகுப்பூதிய அடிப்படையில் வழக்கு கையாளுபவர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி 1 : வழக்கு கையாளுபவர் - 4 (Case Worker)

வழக்கு கையாளுபவர் பதவிக்கு விண்ணப்பிக்க நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சமூகபணி, உளவியல், வளர்ச்சிப்பணிகள் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு, அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவர்.

ஊதியம் ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படும். வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.

பதவி 2 : பாதுகாவலர் - 1 (Security Guard/Driver)

பாதுகாவலர் பதவிக்கு ஆண்/பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். பாதுகாப்பு பணியில் முன் அனுபவம் உடைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத ஊதியம் : ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கப்படும். வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.

பதவி 3 : பல்நோக்கு உதவியாளர்- 1(Multi-purpose Helper)

பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சமையல், வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவர்.

மாத ஊதியம் : ரூ.6,400/- (ரூபாய் ஆறாயிரத்து நானூறு மட்டும்) வழங்கப்படும். வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம் அறை எண்.233,234, கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியரகம், நாமக்கல் - 637003. தொலைபேசி எண்: 04286 299460. என்ற முகவரிக்கு வரும் ௩௧ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Updated On: 25 March 2022 3:05 PM GMT

Related News