மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
X

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்கள் கொண்டு கடும் தாக்குதல் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, நாகமுத்து, ரவிச்சந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் கடந்த 15ம் தேதி பைபர் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி மீனவர்கள் படகில் இருந்த மீன் மற்றும் மீன்பிடி சாதனங்களை பறித்து சென்றுள்ளனர்.இன்று காலை வேதாரண்யம் அருகே கரை திரும்பிய மீனவர்களை மீனவ பிரதிநிதிகள் மீட்டு நாகை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

Updated On: 2021-03-18T10:02:09+05:30

Related News