சீர்காழியில் நகை வியாபாரி மனைவி, மகன் கொலை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சீர்காழியில் நகை வியாபாரி மனைவி, மகன் கொலை
X

சீர்காழியில் நகை கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த சுமார் 17 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகைகடை மற்றும் நகை அடகுகடை நடத்தி வருகிறார் .இந்நிலையில் இன்று அதிகாலை தன்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25 ) மருமகள் நிகில் ( 24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளவில் தன்ராஜ் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் கதவைத் திறந்துள்ளார். இதில் திடீரென அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 17 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.காயமடைந்த தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 2021-01-27T10:53:01+05:30

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 2. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
 3. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
 4. புதுக்கோட்டை
  புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர்
 5. உத்திரமேரூர்
  மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்
 6. காஞ்சிபுரம்
  திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
 7. திருப்பெரும்புதூர்
  ரூ 200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
 8. காஞ்சிபுரம்
  காரின் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது
 9. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுவர் இடிந்து...
 10. தென்காசி
  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட வேண்டிய சூழல் ஏற்படும்