/* */

நாகை மருந்தகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்

நாகையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்ததை சுகாதார துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாகை மருந்தகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகள்.

நாகையில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி சாப்பிட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாகை அடுத்த புத்தூரில் உள்ள கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான தனிஷ்கா என்ற மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர் போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, 390 ரூபாய் மதிப்புள்ள கருக்கலைப்பு மாத்திரைகளை 2500 ரூபாய்க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார். அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்தக உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மருந்தகத்தில் மருந்து சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் கருக்கலைப்பு மாத்திரைகளை வாடிக்கையாளர் ஒருவர் வாங்குவது போல வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 March 2022 3:18 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...