/* */

நாகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

நாகையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.

HIGHLIGHTS

நாகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
X
நாகையில் நடந்த விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக உழவர்களுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் சுமார் 3 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்

டெல்டா மாவட்டங்களில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்படும். கடந்த முறை சாகுபடி செய்த குறுவை நெல்மணிகள், முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு, நெல் மூட்டைகள் வீணாகி விடாமல் கொள்முதல் செய்யப்படும். குறுவைக்கு நடைமுறையில் இருந்த முறை நெல் கொள்முதல் ஆன்லைனில் சிரமம் இல்லாமல் நடைபெறும். இ பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும். இ பதிவில் ஏற்படும் சிக்கல்களை விவசாயிகள் புகாராக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 20 Jan 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    பேருந்துகளில் படிக்கட்டு பயணத்திற்கு வேட்டு: மதுரை ஐகோர்ட் கிளை...