/* */

நாகை அரசு மருத்துவருக்கு மத்திய அரசின் காயகல்ப் தேசிய விருது

நாகை ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறந்த மருத்துவமனையாக. உருவாக்கிய மருத்துவருக்கு. மத்திய அரசு காயகல்ப் தேசிய விருது வழங்கி பாராட்டியது.

HIGHLIGHTS

நாகை அரசு மருத்துவருக்கு மத்திய அரசின் காயகல்ப் தேசிய விருது
X

மத்திய அரசின் காயகல்ப் தேசிய விருது பெற்ற மருத்துவர் உமர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, முட்செடிகளால் சூழப்பட்டுப் புதர் மண்டிக் கிடந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புத்துயிர் கொடுத்து மீட்டு எடுத்து மத்திய அரசின் காயகல்ப் தேசிய விருதை பெற்றுள்ளார் அரசு மருத்துவர் ஒருவர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடவூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் புதர் மண்டி பயன்பாடு இல்லாமல் கிடந்தது.


இந்த நிலையில் வடவூர் கிராமத்திற்கு பணிமாற்றத்தில் வந்த மருத்துவர் உமர் அந்த பகுதி மக்களின் நலனுக்காக மருத்துவமனையை மாற்றி தரம் உயர்த்தி அசத்தியுள்ளார்.

"சென்னையில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, மருத்துவர் உமர், வடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவல நிலையை பார்த்து அதனை மாற்ற முடிவு செய்துள்ளார்.

அதற்காக முள் புதர்களுக்குள் கிடந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இப்போது மரங்கள் சூழப் பசுமையாக மாற்றி, மாணவர்கள், கிராம மக்கள் உதவியுடன் நீண்டதூரம் குழாய் அமைத்துக் குடிநீர் வசதி, இணையதள வசதி, சோலார் மின் விளக்கு வசதி உள்ளிட்டவையும் கொண்டு வந்து மக்களை கவரும் வகையில் மாற்றியுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தற்போது ஆர்வத்துடன் வடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.


குறிப்பாக வடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வருடத்துக்கு இரண்டு பிரசவங்கள் பார்த்து வந்த நிலையில் மருத்துவர் உமரின் முயற்சியால், தற்போது மாதத்திற்கு 20 பிரசவத்திற்கு குறையாமல் நடத்துவதாக கூறுகிறார் மருத்துவர் உமர்.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்ற மூன்று மாதத்தில் இங்கு வந்து பதிவு செய்தால் 2,000 ரூபாயும், 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியும் வழங்கப்படும் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வழங்கி அரசு மருத்துவமனையில் மக்கள் குவிய வழிவகை செய்துள்ளார்மருத்துவர் உமர்.

மேலும், நான்காவது மாதத்தில் மீண்டும் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பெட்டியும் பிரசவ காலத்தில் 4,000 ரூபாயும் கிடைக்கும். பிறந்த குழந்தைக்கு இரண்டு தடுப்பூசிகள் போட்டவுடனே 4,000 ரூபாய் கிடைக்கும். ஒன்பது மாதத்துக்குப் பிறகு மீண்டும் தடுப்பூசி போட்டபின்பு 2,000 ரூபாய் கிடைக்கும் போன்ற அரசின் சலுகைகளை கிராம மக்களுக்கு தெரிய படுத்தி விழிப்புணர்வில் மருத்துவ குழுக்கள் ஈடுபடுவதால், ஆர்வத்துடன் மக்கள் பிரசவம் பார்த்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சொந்தப் பணத்திலும், சிலரிடம் கிடைத்த உதவி மூலமாகவும் கம்ப்யூட்டர், இணையதள சேவை ஆகியவற்றைக் கொண்டு வந்து, கர்ப்பிணிகளுக்காக வாட்ஸ் அப் சேவை தொடங்கி சுகப்பிரசவம் நடைபெற உதவும் யோகா போன்றவற்றையும் ஆலோசனையாகக் கொடுத்து வருகின்றனர்.


வருடத்துக்கு இரு பிரசவங்கள் நடந்த இந்த ஆஸ்பத்திரியில் இப்போது மாதம் 10 பிரசவங்கள் நடக்கின்றன என்று பெருமையாக கூறும் அப்பகுதி பெண்கள், வெளியூர்களிலிருந்தும் கர்ப்பிணிகள் நம்பிக்கையோடு வருவதாகவும் கூறுகின்றனர்.

கஜா புயலால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சில மரங்கள் சரிந்துவிட்டதால், தற்போது இங்கு பிரசவம் முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு தாயும் ஒரு மரத்தை நட்டுவிட்டுச் செல்வது கூடுதல் சிறப்பு.

மருத்துவரின் இத்தகைய சேவையை பாராட்டி தமிழக அரசின் சிறப்பு மருத்துவ குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் உமர்,

தற்போது மத்திய அரசின் காயகல்ப் என்ற தேசிய விருதை பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  2. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  4. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  5. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  6. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  7. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  8. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை