500 நாட்களை கடந்த நாகை சித்த மருத்துவரின் கொரோனா விழிப்புணர்வு சேவை

நாகை மாவட்ட சித்த மருத்துவரின் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ சேவை 500 நாட்களை கடந்து உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
500 நாட்களை கடந்த நாகை சித்த மருத்துவரின் கொரோனா விழிப்புணர்வு சேவை
X
நாகையில் கபசுர குடிநீர் வழங்குகிறார் சித்த மருத்துவ டாக்டர்

நாகப்பட்டிணம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி கிராமத்தில் வசித்து வரும் சித்தமருத்துவர் அஜ்மல்கான் இலவச மருத்துவ சேவையை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டு காலமாக இப்பணியை செய்து வரும் இவர் வரும் முன் காப்போம் என்ற விழிப்புணர்வு சேவை மையத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 50,000 லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் சொந்த பணத்தில் தயார் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார். கொரோனா காலத்தில் கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு பணியை தொடங்கிய இவரது சமூக சேவை 500 நாட்களை கடந்துள்ளது. கொரோனா முதல் அலையில் இருந்து மூன்றாவது அலை வரை நாகை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக சித்த மருத்துவ சேவையை செய்து வருகிறார்.

திருமருகல், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா குறித்த இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 4:21 AM GMT

Related News