/* */

நாகையில் மாட்டு வண்டியில் சென்று மாட்டு பொங்கல் கொண்டாடிய கலெக்டர்

நாகையில் மாட்டு பொங்கல் விழாவை மாட்டு வண்டியில் சென்று கலெக்டர், மீன வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

நாகையில் மாட்டு வண்டியில் சென்று மாட்டு பொங்கல் கொண்டாடிய கலெக்டர்
X

மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதற்காக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் மாட்டு வண்டியில் சென்றனர்.

மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை வணங்கி பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் அம்பல் கிராமத்தில் மாட்டு பொங்கல் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோரை மாட்டு வண்டியில் ஏற்றி மேல தாளத்துடன் கிராமத்திற்கு அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

மாட்டுப்பொங்கல் விழாவில் மேளம் அடித்து நடனமாடினர்.

பின்னர், நடந்த நிகழ்ச்சியில் கால்நடைகளை சூடம் ஏற்றி வணங்கி, கால்நடைத்துறை சார்பாக 100க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்பு கலவைகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வழங்கினார். தொடர்ந்து மேடையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் தப்படித்து நடனமாடி கிராம மக்களோடு பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தங்களது மாடுகளுக்கு மாலையிட்டு அலங்கரித்து மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடிய அப்பகுதி மக்கள் மஞ்சள் தண்ணீரை மாடுகளின் மீது தெளித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். மேளதாளத்துடன் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் விழாவில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 16 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...