/* */

நாகை நீத்தார் நினைவு ஸ்தூபியில் கலெக்டர், எஸ்.பி. வீர வணக்க அஞ்சலி

நாகையில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க கலெக்டர், எஸ்.பி. வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

நாகை நீத்தார் நினைவு  ஸ்தூபியில் கலெக்டர், எஸ்.பி.    வீர வணக்க அஞ்சலி
X

நாகை ஆயுத படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் கலெக்டர் அருண் தம்புராஜ் வீர வணக்க அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1959 ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 377 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தார் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் நாகை எஸ்.பி. ஜவகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து காவல்படை சார்பாக 51 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 12 லட்ச ரூபாய் நிதியினை ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

Updated On: 21 Oct 2021 10:30 AM GMT

Related News