/* */

12 நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்ற நாகை விசைப்படகு மீனவர்கள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 12 நாட்களுக்கு பின்னர் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றனர்.

HIGHLIGHTS

12 நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்ற நாகை விசைப்படகு மீனவர்கள்
X

நாகை மாவட்ட மீனவர்களின் விசைப்படகுகள் கடலில் சீறிப்பாய்ந்து சென்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்தடுத்து உருவான காரணத்தால் இந்திய வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், விழுந்தமாவடி, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைத்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

கடல் சீற்றம் தனித்ததையடுத்து மீன்வளத்துறை மூலம் கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன வழங்கப்பட்டது. இதனையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். முன்னதாக ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ்கட்டி, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவைகளை சேகரித்தமீனவர்கள் தங்களுக்குப் போதுமான மீன்கள் வலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.


Updated On: 21 Nov 2021 4:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  2. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  3. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  4. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  9. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு