/* */

தமிழக அரசின் காப்பீட்டு அட்டை வாங்குங்க..! உயர் சிகிச்சை பெறலாம்..!

Muthalamaichar Kapitu Thittam in Tamil-சாதாரண மக்களும் உயர்வகை சிகிச்சை பெறுவதற்காக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமே முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்.

HIGHLIGHTS

தமிழக அரசின் காப்பீட்டு அட்டை வாங்குங்க..! உயர் சிகிச்சை பெறலாம்..!
X

muthalamaichar kapitu thittam-முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்.(கோப்பு படம்)

Muthalamaichar Kapitu Thittam in Tamil-தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குள் வாழும் சாதாரண மக்கள் தங்களது உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவ செலவை எதிர்கொள்ளமுடியாமல் பல உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர். சாதாரண ஏழை,எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை, ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசின், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், 23.09.2018 தொடங்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சைகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறவும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பயனர்கள் :

• தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.40 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

• இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.

• இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பயன்கள் :

• இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

• சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள்:

  • இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை
  • புற்று நோய் மருத்துவம்
  • சிறுநீரக நோய்கள்
  • மூளை மற்றும் நரம்பு மண்டலம்
  • முடநீக்கியல் அறுவை சிகிச்சைகள்
  • கண் நோய் சிகிச்சை
  • இரத்தக் குழாய்களுக்கான அறுவை சிகிச்சை
  • ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள்
  • காது, மூக்கு, தொண்டை
  • கருப்பை நோய்கள்
  • இரத்த நோய்கள்
  • இதர பிற நோய்கள்
  • தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சை,
  • விபத்து மற்றும் இதர காயங்களுக்கு உள்நோயாளி சிகிச்சை தேவைப்படும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள், கோமா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களுக்கு மருத்துவம், பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் போன்றவை ஆகும்.

தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய நிறுவனமான யுனைடெட் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.

இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண்: 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களைபெறுவதற்கு https://www.cmchistn.com/features_ta.php என்கிற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் சாதாரண மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் திட்டம் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்ட திட்டமாக இது இருந்துவருகிறது.

உதவி மையம் :

இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைபேசி எண்.1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 April 2024 3:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது