/* */

ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

HIGHLIGHTS

ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
X

அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவரும் 12, 13ம் தேதிகளில் போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளது.

அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அதன்படி, பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து

* திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.

* போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

* திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள்.

* திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து

* வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து

புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் (வழி ஈ.சி.ஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்.

மேற்கூறிய 3 இடங்களில் இருந்து வரும் 12, 13ம் தேதிகளில் மக்கள் பேருந்துகளில் பயணிக்கலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை