/* */

வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்: யாரை பாதிக்கும்? அறிகுறிகள் என்ன?

இந்தியா உள்பட பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவத் தொடங்கி உள்ள நிலையில், யாரையெல்லாம் அது பாதிக்கும், என்ன அறிகுறிகள் தென்படும் என்ற விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்: யாரை பாதிக்கும்? அறிகுறிகள் என்ன?
X

'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கு காய்ச்சல், கடந்த 10 நாட்களில், 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கடந்த, 1958ஆம் ஆண்டில், குரங்குகளுக்கு மத்தியில் பரவிய இந்த வைரஸ் நோய், மனிதர்களிடையே 1970ம் ஆண்டில் பரவத் தொடங்கியது.

எங்கே தோன்றியது?

ஆப்ரிக்க நாடான காங்கோவில் தான், இது முதலில் பரவியது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் 'மங்கி பாக்ஸ்' என அழைக்கப்படுகிறது. இது, ஆப்ரிக்காவில் மட்டுமே தென்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஸ்வீடன், பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. குரங்கு காய்ச்சல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவையும் விட்டு வைக்கவில்லை.

அறிகுறிகள் என்ன?

இந்த தொற்று பாதித்தவர்களுக்கு, ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கணுக்களில் வீக்கம், சருமத்தில் கொப்புளம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டதும் உடலில் தடிப்புகள் தோன்றுகின்றன. இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும். 14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும். குரங்கு காய்ச்சல் தீவிரமாகும் போது இறப்பு நேரிடலாம். 10ல் ஒருவருக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த அபாயம் அதிகம் உள்ளது.

இந்தியாவில் அலர்ட்!

குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் இல்லாத சூழலில், இதன் பரவலை, மிகவும் அசாதாரணமான சூழ்நிலை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், குரங்கு காய்ச்சல் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோரை, விமான நிலையங்களில் பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், கேரளாவில் குரங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. வயநாடு மாவட்டம் திருநெல்லி, குருக்கு மூலா, பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் உயிரிழந்த நிலையில், கேரளாவில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பாதிப்பு உண்டா?

அண்டை மாநிலமான கேரளாவில் குரங்குக்காய்ச்சல் பரவலால், தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில், குரங்கு காய்ச்சல் பரவவில்லை; மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. 'ஒமைக்ரான் பிஏ 4 வைரஸ்' தமிழகத்தில் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது; பெரியளவில் பாதிப்பு இல்லை. ஜூன் 12ல், தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார்.

Updated On: 24 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு