/* */

தமிழ் மொக்கை ஜோக்ஸ்

Mokkai Jokes -வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தமிழ் ஜோக்ஸ், தமிழ் கடி ஜோக்ஸ், தமிழ் மொக்கை ஜோக்ஸ் உங்களுக்காக

HIGHLIGHTS

தமிழ் மொக்கை ஜோக்ஸ்
X

பைல் படம்

Mokkai Jokes -பொதுவா நம்மில் பலருக்கு ஜோக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நகைச்சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் ஜோக்ஸ், தமிழ் கடி ஜோக்ஸ், தமிழ் மொக்கை ஜோக்ஸ் என்று தங்களுக்கு பிடித்த நகைச்சுவை வரிகள் மற்றும் தமிழ் ஜோக்ஸ் படங்கள்

நல்ல செருப்புங்க ஒரு 500 ரூபாய் இருக்கும்.. உள்ள போறப்ப இருந்தது.. வெளிய வந்தா காணோம்.. சரின்னு ஏன் செருப்பையே போட்டுட்டு வந்துட்டேன்

பல்லு. நாக்கை பார்த்து சொல்லுச்சாம்: நாங்க 32 பேரும் சேர்ந்து ஒரு தடவை இறுக்கி அழுத்தினால் நீ காலி.

நாக்கு சிரிச்சிகிட்டே சொல்லுச்சாம்: நான் தனி ஆளு தான். ஆனா ஒரு வார்த்தை தப்பா பேசுனா நீங்க 32 பேரும் காலி..

பக்கத்து வீட்டுக்காரன் காய்ச்சல்ல இருக்கானு பாக்க போனேன், என்னய்யா உடம்பு இப்படி கொதிக்கிதுன்னு ??? கேட்டா,

நெருப்புடா.. கபாலிடா.. ங்குறான்

சாவுடானு சொல்லிட்டு வந்துட்டேன்..!

மனைவி: ஏங்க நான் வரும்போது மட்டும் ஏன் கண்ணாடி போடுறிங்க

கணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் போட்டுக்க சொன்னாரு..!

வேடந்தாங்கலுக்கு பறவை எங்கிருந்து வருகின்றன?

விடை: முட்டைல இருந்துதான்

கல்யாண வீட்டுக்கு ஏன் மாட்டையும் கன்றுக்குட்டியையும் கூட்டிட்டு வரமாட்றாங்க?

ஏன்னா கல்யாணம் ஒரு ஆயிரம் காலத்து பயிர், மாடும் கன்றுக்குட்டியும் அத மேஞ்சிடும்

இரண்டு பேர் ஒரு Hotel-க்கு போய் ஆளுக்கு நாலு நாலு இட்லி order பன்றாங்க இந்த இட்லிய சாப்பிட்டதும் Food poison ஆகிடுச்சு ஏன்>

விடை: ஏன்னா அது நாலு நாள் இட்லி

ரோட்டுல போற நிறைய பேர் ஒருத்தர் கிட்டமட்டும் அடிக்கடி Time கேக்குறாங்க ஏன்?

விடை: ஏன்னா அவரு வாட்ச்மன்


ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?

ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.


தண்ணில இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்?

ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.

லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.

ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?

ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.

The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்?

ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.

Costlyஆன கிழமை எது?

"வெள்ளி" கிழமை

"தமிழ் நியூ இயர்"-க்கும், "இங்கிலிஷ் நியூ இயர்"-க்கும் என்ன வித்தியாசம்

4 மாசம் தான் வித்தியாசம்



குடிக்க முடியாத டீ எது?

கரண்டி

டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

இருவரும் அடிக்கடி மாற வேண்டும்

வேலைக்கு போற விலங்கு எது?

பனி கரடி.

பாம்புக்கும் ஷாம்புக்கும் என்ன வித்தியாசம்?

ஷாம்பு போட்டா தலையிலே நுரை வரும். பாம்பு போட்டா வாயிலே நுரை வரும்,

ஏனென்றால் அது ஒரு "ஹிட்" பாடல்

கண்டக்டர்: நான் விசில் அடிச்சு பஸ் நிக்கலே

டிரைவர்: நான் பிரேக் அடிச்சே பஸ் நிக்கலா நீ விசில் அடிச்சா நின்றுமா?

பென்குயின் எதிர் சொல் என்ன?

ஆண் கிங்

புறா மற்றும் அணில் மூலம் நீங்கள் அஞ்சல் அனுப்பினால், எது முதலில் சென்றடையும்?

அணில். என்ன அதில் பின்கோடு இருக்கே!

ரொம்ப நாள் உயிர் வாழ என்ன வழி?

சாகாம இருக்கணும்

பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவா ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

ராமராஜன் ஹாலிவுட் படம் பண்ணா என்ன ரோல் பண்ணுவார்?

கவ்பாய் – பாத்திரம்

சினிமா பாக்க போனா சி-ரோவில் உக்கார கூடது ? ஏன்?

முன்னால பி-ரோ இருக்கு... அது மறைக்கும்

ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் ஒரே பேருந்தில் சென்றனர். ராமன் & லட்சுமணன் மட்டும் அயோத்திக்குப்பம் நிறுத்தத்தில் இறங்கினர், சீதை ஜன்னல் வழியே குதித்தாள், ஏன்?

ஏனென்றால் சீதை "படி தாண்டா பத்தினியாச்சே".

வரி கட்ரா ஒரே விளங்கு எது?

வரிகுதிரை

ஒருத்தர் கல்யாணம் பண்றதுக்கு விவசாய கடன் கேட்டார். ஏன்?

ஏன்னா அது ஆயிரம் (1000) காலத்து பயிராச்சே

வெயிட் இல்லதா வீடு எது?

லைட் ஹவுஸ்

எல்லா ஸ்டேஜ் லேயும் டான்ஸ் ஆடலாம் ஆனா ஒரு ஸ்டேஜ் ல மட்டும் ஆட முடியாது, அது எந்த ஸ்டேஜ்?

கோமா ஸ்டேஜ்

எல்லா லெட்டரும் வருகிற மாதிரி ஒரு வார்த்தை சொல்லுங்க?

தபால் பெட்டி

ஒரு குழந்தை தேர்வில் பூஜ்ஜியம் வாங்கியது. அப்பா கோபமாக, "என்ன இது?" என்று கேட்டார்.

அதற்கு டீச்சரிடம் கொடுக்க அதிக நட்சத்திரங்கள் இல்லை, அதனால் அவர் சந்திரன் கொடுக்க ஆரம்பித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Feb 2024 7:07 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்