/* */

இனி 5 நாட்களுக்கு மிதமான மழை தானாம்... வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

இனி 5 நாட்களுக்கு மிதமான மழை தானாம்... வானிலை ஆய்வு மையம்
X

பைல் படம்

தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மாலை 1730 மணி அளவில் புயலாக (SITRANG) வலுப்பெற்று, இன்று காலை 0830 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில், சாகர் தீவுகளுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் தொலைவிலும், BARISAL(வங்காள தேசம்)க்கு தெற்கு-தென்மேற்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு வட-கிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்குவடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கக்கூடும்.

24.10.2022: தென் தமிழக மாவட்டங்கள் (ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை), டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர்), நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.10.2022 முதல் 27.10.2022 வரை: தென் தமிழக மாவட்டங்கள் (ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை), டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர்), நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சிவகிரி (தென்காசி) 7, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சூரலகோடு (கன்னியாகுமரி) தலா 4, குளச்சல் (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 3, இரணியல் (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), சிவலோகம் (கன்னியாகுமரி), பூதபாண்டி (கன்னியாகுமரி), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி) தலா 2, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), கன்னிமார் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கோவிலங்குளம் (விருதுநகர்), வட்ராப் (விருதுநகர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24.10.2022 முதல் 28.10.2022 வரை: தமிழக கடலோர பகுதிகளுக்கான மீனவர் எச்சரிக்கை ஏதுமில்லை

24.10.2022: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

25.10.2022: வடக்கு வங்கக்கடல் மற்றும் வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Oct 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...