/* */

2-வது முறையாக தி.மு.க. தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க. ஸ்டாலின்

இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

HIGHLIGHTS

2-வது முறையாக தி.மு.க. தலைவராக    போட்டியின்றி தேர்வானார் மு.க. ஸ்டாலின்
X
மு.க. ஸ்டாலின்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் கிளை கழக நிர்வாகி முதல் தலைவர் வரை நிர்வாகிகளை கட்சி விதிமுறைப்படி தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும் என்பது பொதுவான சட்டம்ஆகும். அதே போல் அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு பொதுக்குழு கூட்டத்தையும், இரண்டு செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பதும் தேர்தல் ஆணைய விதிமுறை ஆகும்.

அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.வின் 15 வது உட் கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களாக நடந்து முடிந்தது. கிளை செயலாளர் தொடங்கி மாநகரம்,நகரம்,பேரூர், ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டனர். தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தி.மு.க.தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது தலைவர் பதவிக்கு தற்போதைய தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் ஸ்டாலின் மீண்டும் தலைவர் ஆவதற்காக விண்ணப்ப மனுக்களை வாங்கி அதற்கான பணத்தையும் கட்டி அவருக்கு ஆதரவாக தாக்கல் செய்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனு தாக்கல் செய்தனர் இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டார். வழிநெடுக அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். பொதுக்குழு நடைபெறும் கலைஞர் அரங்கிற்குள் ஸ்டாலின் வந்ததும் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கியது. தி.மு.க.வின் மூத்த முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தி.மு.க. தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக அவர் வயது முதிர்வின் காரணமாக சக்கர நாற்காலியில் வந்து இருந்தார்.

கனிமொழி எம்.பி.

ஸ்டாலின் வந்ததும் பொதுக்கூட்ட பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் தொடங்கின. ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆற்காடு வீராசாமி இதனை அறிவித்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இதன் தொடர்ச்சியாக மு.க. ஸ்டாலின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர்களாக அமைச்சர்கள் பொன்முடி, ஐ. பெரியசாமி, ஆ.ராசா எம்.பி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கனிமொழி எம். பி.யும் தி.மு.க. துணை பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மேடையிலேயே வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் தி.மு.க. பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகனும், பொருளாளராக டி. ஆர். பாலு எம்.பி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தி.மு.க. முதன்மைச் செயலாளராக அமைச்சர் கே. என். நேரு மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தணிக்கை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இறுதியாக தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக பொது குழு உறுப்பினர்களுக்கு மு. க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசுவார் .அத்துடன் கூட்டம் நடைபெறும் .பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2640 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை தி.மு.க தலைவர் பதவியில் அவர் தான் இருந்து வந்தார். கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது மு. க. ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தார்.கருணாநிதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து மு. க. ஸ்டாலின் தி.மு.க. தலைவரானார். இப்போது இரண்டாவது முறையாக அவர் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தலைவர் ஆனார். இப்போது முதலமைச்சராக இருக்கும்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருணாநிதி 11 முறை தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Oct 2022 4:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்