/* */

மயிலாடுதுறை அருகே குளத்தில் நீச்சலடித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி

மயிலாடுதுறை அருகே குளத்தில் நீச்சலடித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி பரிதாபமாக உயிரிழந்தான்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே குளத்தில் நீச்சலடித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி
X

நீரில் மூழ்கி இறந்த யுவராஜ்.

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை அழகியநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெயின்டர் மணி. இவருக்கு 2மகன்கள் உள்ளனர். 11ம் வகுப்பு படிக்கும் யுவராஜ் (15) தனது தம்பி விஜயேந்திரன் மற்றும் நண்பர்களுடன் ஆனந்தக்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளித்து உள்ளனர். குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி யுவராஜ் தத்தளித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியாததால் மயிலாடுதுறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து தீயணைப்புத் துறை அலுவலர் முத்து குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணிநேரம் போராடி யுவராஜை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் யுவராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யுவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Jan 2022 4:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு